சூடான செய்திகள் 1

பஸ் சங்கங்களின் வேலை நிறுத்தம் முடிவு

(UTV|COLOMBO)-நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவிருந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

 

பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான யோசனை எதிர்வரும் 22ம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அமைச்சரவையின் அனுமதி கிடைத்த தினத்தில் இருந்து உரிய யோசனையை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதியமைச்சர் அசோக அபேசிங்ஹ கூறினார்.

 

அரசாங்கம் 12.5 சதவீத பஸ் கட்டண அதிகரிப்பிற்கு இணக்கம் தெரிவித்ததாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

 

ஏற்கனவே அமுல்படுத்த திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்தைக் கைவிட்டதாகவும் அவர் கூறினார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் புதிய கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரவிருக்கிறது. பிரதியமைச்சர்களான லசந்த அழகியவன்ன, அசோக அபேசிங்ஹ ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நான் தொடர்ந்தும் அமெரிக்காவின் பிரஜை இல்லை – கோட்டாபய

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிபொருளுக்கான வரிசை

editor