கிசு கிசு

பழைய நினைவுகளை இழந்தார் பிரேசில் ஜனாதிபதி

(UTVNEWS | COLOMBO) –குளியலறையில் வழுக்கி விழுந்து பழைய நினைவுகள் அனைத்தும் இழந்துவிட்டேன். சிகிச்சைக்கு பிறகே படிப்படியாக எனது நினைவுகளை மீட்டெடுத்தேன் என்று பிரேசில் ஜனாதிபதி ஜெயீர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.

பிரேசிலியாவில் உள்ள ஆல்வொராடா மாளிகையில் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெயீர் போல்சனரோ குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

குறித்த மாளிகையில் உள்ள குளியலறைக்கு சென்ற போல்சனரோ திடீரென வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் அடிபட்டது.

பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சுமார் 10 மணி நேரம் வைத்தியர்களின் கவனிப்பில் இருந்த அவர் பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இது குறித்து போல்சனரோ நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “என் தலை தரையில் மோதியதால் நான் நேற்று என்ன செய்தேன் என்பது உட்பட பழைய நினைவுகள் அனைத்தையும் இழந்துவிட்டேன். சிகிச்சைக்கு பிறகே படிப்படியாக எனது நினைவுகளை மீட்டெடுத்தேன். தற்போது தான் நலமாக இருக்கிறேன். கடவுளுக்கு நன்றி” என கூறினார்.

Related posts

பசிலும் இராஜினாமா : இடைக்கால அரசில் பசிலுக்கு எந்தப் பதவியும் இல்லையாம்

எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை

இலங்கையர்களை கண்ணீர் ஆழ்த்தியுள்ள செல்பி புகைப்படம்…