உலகம்சினிமா

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.

இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். உடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். 50 ஆண்டுகால திரை வாழ்வில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பிற்காக கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளில் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.

இவரது 14 -ம் வயதில் மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 -ல் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

இவரது நடிப்பிற்காக பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றார்.

Related posts

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு

editor

இந்தியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரதமர் மோடியும் பங்களாதேஷ் நோக்கி