உள்நாடுபிராந்தியம்

பள்ளிவாசலுக்கான இடைக்கால நிர்வாக சபையில் தலையீடு – ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை

சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான இடைக்கால நிர்வாக சபையில் பிரஜா சக்தி உறுப்பிர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் வக்பு சபை அரசியல் பின்புலத்துடன் செயற்படுவதாகவும் இதன் பின்னணியில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அதிகார துஸ்பிரயோத்துடன் செயற்படுவதாக வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் செயலாளர் ஏ.எம்.றம்சான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் தற்காலிகமாக இடம்பெற்றுள்ள இடைக்கால நிர்வாக சபை சம்பந்தமாக விசேட ஊடாக சந்திப்பு ஒன்று செவ்வாய்க்கிழமை
(20) சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இரவு நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் தற்காலிகமாக இடம்பெற்றுள்ள இடைக்கால நிர்வாக சபை சம்பந்தமாக பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்திருக்கின்றன.

கடந்த 2014 ஆண்டில் இருந்து நிரந்திரமாக நிர்வாக சபை இப்பள்ளிவாசலில் இயங்கி வந்த நிலையில் 2024 ஆண்டு வை.எம்.ஹனீபா சேர் மரணித்ததன் பிற்பாடு ஹிபதுல் ஹரீம் சேர் தலைமையை பொறுப்பேற்று அந்த பள்ளிவாசல் நிர்வாகம் இடம்பெற்று கொண்டு வருகின்றது.

கடந்த 10 ஆண்டு காலமாக இப்பள்ளிவாசலில் நிரந்திர நிர்வாகம் இல்லாமல் எங்களது சாய்ந்தமருது பிரதேசம் தவித்துக்கொண்டு இருக்கின்றது.

ஒரு நிரந்திர நிர்வாகம் இல்லாமல் எந்தவொரு முறையான செயற்பாடுகளை கையாள முடியாது பாரிய சிக்கல் காணப்படுகின்றன.

இந்தப்பள்ளிவாசலுக்கு சுமாராக 84 ஏக்கர் காணி இருக்கின்றது.

இந்த காணி தொடர்பில் தற்போது உள்ள இடைக்கால நிர்வாகத்திற்கோ அல்லது அப்பள்ளிவாசலில் பணி புரிபவர்களுக்கு அடிப்படையில் ஒன்றும் தெரியாது.

இது தவிர கோடிக்கணக்கான சொத்துக்கள் கடைகள் கூட இப்பள்ளிவாசலுக்கு இருக்கின்றன.

இவற்றை சரியாக நிர்வகிப்பதற்கு நிலையான நிர்வாக சபை ஒன்றின் தேவை உள்ளது.அவ்வாறு அச்சபை இருந்தால் தான் எமது ஊர் வளர்ச்சி அடையும். ஆனால் இடைக்கால நிர்வாகம் ஒரு எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது.

எனவே எங்களது சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக நிரந்திர நிர்வாக சபை ஒன்றின் தேவை உள்ளது.இது தொடர்பில் அரசாங்கத்தின் ஊடாக வக்பு சபையினை அணுகி நிரந்திர நிர்வாக சபை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடி இருந்தோம்.

அதுவும் தட்டி கழிக்கப்பட்டது.வக்பு சபை என்பது தற்போது ஒரு சுயாதீனம் இல்லாமல் அரசியல் பின்புலத்துடன் இயங்குவதாக எமக்கு தோன்றுகின்றது.

இலங்கையில் இவ்வாறான பிரச்சினைகள் பல்வேறு இடங்களில் இடம்பெற்று இருக்கின்றன.குறிப்பாக எமது சாய்ந்தமருது பகுதிக்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நிரந்திர நிர்வாகம் ஒன்று இல்லாமல் இருக்கின்றது.

எனவே ஒரு நிரந்திர நிர்வாகம் இல்லாமல் ஊரை அபிவிருத்தி செய்யவோ அல்லது பள்ளிவாசலை பராமரிக்கவோ பாரிய சிக்கல் உள்ளது.

2025.02.16 திகதி எமது பிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரினால் 42 பேர் கொண்ட இடைக்கால நிர்வாக சபை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இச்சபை நிர்வாகத்தை சிறப்பாக செய்வார்கள் என மக்களாகிய நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அவர்களால் ஒரு எல்லைக்கு அப்பால் சென்று செயற்பட்ட முடியாமல் போய்விட்டது.

இது தவிர தற்போது வெளிவந்துள்ள இடைக்கால நிர்வாக சபையில் கூட பிரஜா சக்தி உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.நாங்கள் அரசாங்கத்தை மதிக்கின்றோம்.

ஆனால் அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தில் இவ்வாறாக நடந்து கொண்டுள்ள விதம் மிகவும் கவலையை தருகின்றது.காரணம் மக்கள் தற்போது குழப்பத்தில் இருக்கின்றார்கள்.

எனவே வக்பு சபை இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்தி மீண்டும் புதிய நிர்வாக சபை ஒன்றினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இப்பள்ளிவாசலில் நிரந்திர நிர்வாகம் வந்தால் தான் யாப்புகளை திருத்த முடியும்.

இது தொடர்பில் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் அறிவிக்க இருக்கின்றோம்.அதற்குரிய ஆவணங்களை தயார்படுத்தி இருக்கின்றோம்.என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம் என குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம் அஸீம் வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் உறுப்பினர் யு.எல் றிஸ்வி ஆகியொரும் உடனிருந்தனர்.

-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்

Related posts

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க கோரிக்கை

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்வு

புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு