உள்நாடு

பல அமைச்சர்களுக்கு புதிய பொறுப்புகள்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில், அவருக்கு கீழ் உள்ள அமைச்சுகளில் உள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கு பதில் அமைச்சர்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைக்கான பதில் அமைச்சராகவும், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராகவும், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹேரத் தொழிநுட்பத்திற்கான பதில் அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக அனுப பாஸ்குவால், பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மார்ச் 5ம் திகதிக்கு பின்னர் மின்வெட்டுங்கள்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில்

இலங்கை-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் கண்டியில் நூலகத்தை திறப்பு!