உள்நாடு

பல்கலைக்கழக மாணவர் மரணம் – மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸில் சரண்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட நான்கு மூன்றாம் ஆண்டு மாணவர்கள் உட்பட, 11 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவரின் மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் நான்கு மாணவர்கள் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சரணடைந்த மாணவர்கள் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

சீன உர நிறுவனம் நஷ்டஈடு கோரி கடிதம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

இலங்கை தொடர்பான IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம்