அரசியல்உள்நாடு

பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான இந்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் அவர்களினால் 2025 டிசம்பர் 03 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், அரசியலமைப்புப் பேரவையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூன்று உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முடிவடைந்துள்ளதால், அரசியலமைப்பின் 41 அ (4) மற்றும் (5) ஆகிய யாப்புக்களுக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூன்று உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய பிரேரணைக்கு இன்று பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய;

  1. ஒஸ்டின் பிரணாந்து
  2. பேராசிரியர் வசந்தா செனெவிரத்ன
  3. ரஞ்சித் ஆரியரத்ன

ஆகிய மூன்று நியமனங்களுக்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அங்கீகரிக்கப்பட்ட மூன்று நியமனங்களும் கௌரவ சபாநாயகரினால் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படும்.

Related posts

சி.ஐ.டியில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர எம்.பி

editor

பல விடயங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை – ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பு தேவை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

editor

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134