சூடான செய்திகள் 1

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு

(UTV|COLOMBO) அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அந்தந்தபல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினையை முன்வைத்து கடந்த 30நாட்களுக்கு மேலாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, கடந்த வருடத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களைஉள்வாங்கும் பணி இன்று முதல் ஆரம்பமாவதாகவும் பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல்: அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்படவுள்ள அதிரடி தடை

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

editor

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து