உள்நாடுசூடான செய்திகள் 1

பலஸ்தீன் – இஸ்ரேலுக்கு எதிரான போரை நிறுத்த கையொப்பம் : ஐ.நாவிடன் சென்றடைந்தது

(UTV | கொழும்பு) –  பலஸ்தீன மக்களின் அவல நிலை மற்றும் இலங்கையில் நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான சந்திப்பு ஐ.நா தூதரகத்தில் நேற்று இடம்பெற்றது.

“ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். பலஸ்தீனின் அவல நிலை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடினோம். பலஸ்தீன் – இஸ்ரேல் மோதலை உடன் நிறுத்தும் வகையில், ஐ.நா. நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.

இதேவேளை, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை உடன் நிறுத்தவேண்டும் என 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய மகஜர் உரியவர்களிடம் சென்றடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிராஞ் உறுதிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தல்

எனது முதலாவது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் – பிரதமர் ஹரிணி

editor

ரணிலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அனுரவையே பலப்படுத்தும் ஆபத்து – ஊழல், இனவாதிகளை தோற்கடிப்போம் – நிந்தவூரில் தலைவர் ரிஷாட்

editor