உள்நாடு

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் குருநாகல் மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு, இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு

மறு அறிவித்தல் வரை உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

editor

இலங்கையில் நிலநடுக்கம்!