உள்நாடுபிராந்தியம்

பலத்த மழை – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில் கொண்டு, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (20) அதிகாலை முதல் இந்த வான்கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் மீதமுள்ள வான்கதவுகள் தானாகவே திறக்கும் என்பதால், நீர்த்தேக்க அணையின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அந்த பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் அந்தப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் செயிண்ட் கிளேயார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

-செ.திவாகரன்

Related posts

வலுவான பாராளுமன்றமே எனது எதிர்பார்ப்பு – ஜனாதிபதி அநுர

editor

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

சில சேவைகளை நடாத்திச் செல்ல அரசு அனுமதி