உள்நாடு

பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பெக்கோ சமனின் மனைவி

பெக்கோ சமனனின் மனைவி ஷாதிகா லக்ஷனி கடவுச்சீட்டு மோசடி தொடர்பில் பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றில் நேற்று (10) ஆஜர்படுத்தப்பட்டார்.

பாதாள உலகக் குழுத் தலைவரான பெக்கோ சமன் மற்றும் அவரது மனைவி ஷாதிகா லக்ஷனி உள்ளிட்ட 6 பேர் அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் ஊடாக கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டதாக பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக கடும் பொலிஸ் பாதுகாப்புடன் அவர் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கானது எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அவரது விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

-தீபன்

Related posts

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது – ரணில் விக்ரமசிங்க

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமைதிப்பேரணி நாளை

editor