உள்நாடுபிராந்தியம்

பலத்த காற்று, பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த காற்று, பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த​ எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் உள்ளது.

மேலே உள்ள வரைபடத்தில் ‘Advisory’ பிரிவின் கீழ் குறிக்கப்பட்ட கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 55 – 65 கிமீ வரை அதிகரிக்கும் அதேநேரம் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ மாறக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு அரபிக் கடல் ஊடாக வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்களின் ஆணையை மீறி கட்சி தாவியோருக்கு தேர்தலிலே தீர்ப்பு – ரிஷாட் எம்.பி

editor

படகில் தத்தளித்த 130 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!