சூடான செய்திகள் 1

பரீட்சார்த்திகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்ட கருத்து

(UTV|COLOMBO)-அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் நீதியும், நியாயமும் நிறைவேற்றப்படும் வகையில் செயற்படுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் கடப்பாட்டைக் கொண்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தமது திணைக்களம் சட்டரீதியான பொறுப்பைக் கொண்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.
பெறுபேறு வெளியீடுகளின் போது ஒவ்வொரு விடயதானங்களுக்கும் அமைவாக நாடு முழுவதும் ஆரம்ப நிலைகளை பெற்ற பரீட்சார்திகளின் விபரங்களை வெளியிடுவதானது அவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும் என கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது–பிரதமர்

ஷங்கிரி – லா ஹோட்டல் காலவரையின்றி மூடப்பட்டது