அரசியல்உள்நாடு

பராட்டே சட்டத்தை நிபந்தனைகளுடன் இரத்துச் செய்ய அரசாங்கம் எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவித்தார் சஜித் பிரேமதாச

கடன் பெறுநர்களால் மீள செலுத்தாமல் தவறவிடப்பட்ட கடன்களை அறவிடும் வகையில் அந்தக் கடனுக்கு பிணைப் பொறுப்பாக வங்கிக்கு ஈடுவைக்கப்பட்ட ஏதேனும் ஆதனத்தை பகிரங்க ஏல விற்பனை மூலம் விற்பனை செய்வதற்கு வங்கிகளால் எடுக்கப்படும் நடவடிக்கைளை நிபந்தனைகளோடு மேலும் இடைநிறுத்தும் தீர்மானத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்றைய சபை அமர்வின் போதும் நான் சுட்டிக்காட்டியுருந்தேன்.

இதன் பொருட்டு அரசாங்கத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சட்டத்தை இடைநிறுத்துவதை போலவே, நிலுவைக் கடன் தொகைகளை கட்டாமையால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களுக்கும் கடன் மறுசீரமைப்பைச் செய்வதோடு, செயல்பாட்டு மூலதனத்தை வழங்கி, இந்தத் தொழிற்துறைகளை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

Related posts

விசேட சுற்றிவளைப்பு – உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி

கோப் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!