உள்நாடுபிராந்தியம்

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்தது

இரத்தினபுரி, அயகம, கங்கொடகந்த பிரதேசத்தில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களை PTA விதியின் கீழ் கைது செய்யவில்லை

பாடசாலை மாணவர்களின் பைகளை அரசு சோதனை செய்யும்

Astra Zeneca தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம்