அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பேருந்துகளில் AI தொழில்நுட்பம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதற்கட்டமாக 40 தொழிநுட்ப கருவிகளை பேருந்துகளில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சாரதிகள் சோர்வாக இருந்தால், தூக்கத்தில் இருந்தால், நித்திரைக் கலக்கம் இருந்தால் அல்லது பணியில் இருக்கும்போது செய்யக்கூடாத பிற விடயங்களைச் செய்தால், அவர்களுக்கு நினைவூட்ட இந்த AI தொழில்நுட்பம் பயன்படும்.

இந்த அம்சங்களை இலங்கையில் உள்ள நிறுவனங்கள் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் அவை இலங்கையில் பொதுப் போக்குவரத்திற்கு, குறிப்பாக மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படவில்லை.

எனவே, அவர்களுடன் பேசிய பிறகு, அவர்கள் தங்கள் நிர்வாக அறிவு, தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்க விருப்பத்துடன் முன்வந்தனர்.

முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 40 கருவிகள் வழங்கப்படும்.

Related posts

கிரிபத்கொடை நகரில் மூன்று விற்பனை நிலையங்களில் தீப்பரவல்

டில்லி பொதுக்கூட்டத்தில் உரையாற்ற மஹிந்தவுக்கு சுப்பிரமணியன் சுவாமியிடம் இருந்து அழைப்பு

அக்குரணையில் தீ பரவல் – பிரதான வீதிக்கு பூட்டு.