உள்நாடு

பயணச் சீட்டு வழங்காததால் பஸ் நடத்துனர் பணி நீக்கம் – பயணியை தூற்றியதாகவும் முறைப்பாடு

பயணி ஒருவருக்கு பயணச் சீட்டு வழங்காத பஸ் நடத்துனர் நேற்று (03) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அமைச்சில் பதிவு செய்யப்பட்ட வீதிப் போக்குவரத்து தனியார் பஸ்வண்டி நடத்துனர் ஒருவர், பயணி ஒருவருக்கு பயணச் சீட்டு வழங்காது இருந்ததுடன் அவரை தூற்றியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து மேற்படி நடாத்துனரை போக்குவரத்து அதிகார சபை பணி நீக்கம் செய்துள்ளது.

மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் திருமதி. மதுபாணி பியசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கண்டியில் இருந்து கம்பளை நோக்கிச் சென்ற தனியார் பஸ்வண்டி ஒன்றில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டை விசாரித்த போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Related posts

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனம் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியது

editor

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

editor

75வது தேசிய சுதந்திர தின விழா காலிமுகத்திடலில்