உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் மாலை இறுதித் தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு முன்னரை போன்றே அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் மாத்திரமே செயற்படும்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாண எல்லைகளை தாண்டி அத்தியாவசிய சேவைகளுக்காக சில பொது போக்குவரத்துக்களை ஈடுபடுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்குமாறு சுகாதார தரப்பினர் அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர்.

இந்த சூழலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள கொவிட் தொடர்பிலான ஜனாதிபதி செலணியில் இதுகுறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் கான்ஸ்டபிளை மிரட்டிய சட்டத்தரணியை கைது செய்ய வீட்டிற்கு சென்ற பொலிஸார்

editor

கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

editor

தவறான மருந்து  சீட்டால் பரிதாபாமக உயிரிழந்த குழந்தை