உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தளர்த்தலும் சுகாதார வழிகாட்டுதல்களும்

(UTV | கொழும்பு) –  பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஒரு வீட்டில் இருந்து இருவர் மாத்திரமே வௌியேற முடியும் என குறித்த சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முச்சக்கரவண்டிகளில் இருவரை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை 4.00 மணிக்கு தற்போது அமுலில் உள்ள பயணத் தடையை தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இன்றும் ரயில் சேவைகள் மட்டு

கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பெற்று தர வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor