அரசியல்உள்நாடு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வெறும் கண்துடைப்பு – நிசாம் காரியப்பர் எம்.பி தெரிவிப்பு

அரசாங்கத்தினால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வெறும் கண்துடைப்பு மட்டுமே என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘PTA’ என்பதில் ஒரு ‘S’ சேர்த்து ‘PSTA’ என பெயர் மாற்றியதைத் தவிர எந்த உண்மையான மாற்றமும் அதில் இல்லை. இது சீர்திருத்தம் அல்ல, மறு பெயரிடல் மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ICCPR உடன்படிக்கையின் 9 மற்றும் 10 ஆம் பந்திகளில் உள்ள சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட உண்மையான சீர்திருத்தமே இலங்கைக்கு தேவை என்றும் நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Related posts

சீமெந்தின் விலையும் அதிகரிப்பு

ஜனாதிபதி அநுவுக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் – ஐவர் கொண்ட குழு நியமனம்