வகைப்படுத்தப்படாத

பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழப்பு

(UTV|INDIA) இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ராஜஸ்தான் மாநிலம் அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதுடன், இங்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 2,263 பேருக்கு இன்புளூயன்சா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை அன்று, சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில், பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீள எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூட்டம் நடைபெற்றது.

மேலும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் தவிக்கும் மாநிலங்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு கூடுதல் மருத்துவக் குழுவை அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

“CID report clears Rishad” – Premier

காலநிலை

ගාමිණී සෙනරත්ට එරෙහි නඩුව අගෝස්තුවේ සිට විභාගයට