உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி

(UTV | கொழும்பு) – கொழும்பில் நாளை முதல் சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை  மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை கொழும்பு தலைமை வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

நாளை திறக்கவுள்ள குறித்த ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதாக என பார்வையிட ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்திலிருந்து வெளியானார் ரஞ்சன் [UPDATE]

கொவிட் – 19 தொற்று காலப்பகுதியில் சுகாதார – பாதுகாப்பு நடவடிக்கைகளை மீள்வரையறை செய்யும் Pelwatte

கொழும்பு நகரின் சில பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு