வகைப்படுத்தப்படாத

படகு கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஆந்திரப் பிரதேச மாநிலம் கோதாவரி ஆற்றில் நேற்று 61 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20இற்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்திற்குள்ளான படகில் 11 ஊழியர்கள் உட்பட 61 பேர் பயணித்துள்ளனர். ஆற்றில் மூழ்கியவர்களில் இதுவரை 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம் முழுவதும் படகு சேவைகளை உடனடியாக நிறுத்த அம் மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழக்கப்படும் மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related posts

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

හිස්බුල්ලා පොලිස් මුල්‍ය අපරාධ කොට්ඨාශයට

System implemented to recruit & promote Policemen