உள்நாடு

பசிலின் தீர்மானம்

(UTV | கொழும்பு) – தற்போதைய டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணங்கியுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மருந்துத் தட்டுப்பாடு தொடர்பில் நிதி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக பல அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை மற்றும் நோயறிதல் நடைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில நோயாளிகள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.

Related posts

புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமனம்

editor

இதுவரையில் 1,67 000 இற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

மருத்துவ சிகிச்சைகளின் பின் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ராஜித