உலகம்

பங்களாதேஷில் டெங்குவால் 1000 பேர் வரை உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –

பங்களாதேஷில் டெங்கு காய்ச்சலினால் அண்மைய வாரங்களில் சுமார் 1,000 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தீவிர நிலை தொடர்ந்து நீடிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்திற்கு மாறான பருவமழைக் காலம் டெங்கு வைரஸை ஏற்படுத்தும் நுளம்புகள் அசுத்தமான மற்றும் தேய்ந்திருக்கும் நீரில் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோயை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருவதோடு, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
டெங்கு காய்ச்சலின் தீவிர நிலையில் உடலில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணத்திற்கு இட்டுச் செல்லும். தலைவலி, குமட்டல் மற்றும் மூட்டுவலி நோய் அறிகுறியாக உள்ளன. பங்களாதேஷில் பருவகால நோயாக டெங்கு இருந்தபோதும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பமான மற்றும் ஈரலிப்பான பருவங்கள் காரணமாக இது அடிக்கடி ஏற்படும் ஒன்றாக மாறியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியாவில் ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா

தனது 63 ஆவது விண்கலத்தை அனுப்பிய நாசா!

சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ் – அச்சத்தில் உலக நாடுகள்

editor