உலகம்விசேட செய்திகள்

நேபாளத்தில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

நேபாளத்தில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தொடர்ந்தும் இது குறித்து அவதானம் செலுத்தி வருவதாக நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் (TIA) அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த போராட்டத்தில் இன்றைய தினம் மாத்திரம் 2 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக 21 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க வீசா கட்டணம் உயர்வு

editor

Pfizer இற்கு தடுப்பூசிக்கு எதிராக வழக்கு

ட்ரம்ப் இற்கான வாக்குப் பிச்சையில் பின்லேடனனின் மருமகள்