உலகம்

நேபாளத்தின் முன்னாள் பிரதமரின் மனைவி எரித்துக் கொல்லப்பட்டார் – சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு இராணுவத்திடம்

நேபாளத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பை இன்று (09) இரவு 10 மணி முதல் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக நேபாள இராணுவம் அறிவித்துள்ளது.

சில குழுக்கள் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை, தீ வைப்பு மற்றும் சொத்துக்களை அழித்து வருவதாக நேபாள இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் நேபாள பிரதமரின் மனைவி போராட்டக்காரர்களால் எரித்துக் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர் முன்னாள் பிரதமர் ஜல்நாத் கானாலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

போராட்டக்காரர்களால் அவரை வீட்டில் அடைத்து வைத்து தீயிட்டு எரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தலைநகர் காத்மாண்டுவில் இடம்பெற்றுள்ளது. பின்னர், முன்னாள் பிரதமரின் மனைவி சித்ரகார் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜப்பான் பிரதமர் இராஜினாமா செய்ய தீர்மானம்

editor

ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை

சவுதி இளவரசர் மன்னரை கொல்லவும் திட்டமிட்டிருந்தார்