உள்நாடு

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிய தலைவர் நியமனம்

(UTV | கொழும்பு) – நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான நியமனக் கடிதம் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் புதிய தலைவரிடம் இன்று (01) காலை நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதான அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளராகவும் நீல் டி அல்விஸ் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

முன்னாள் ஜனாதிபதியின் செலவுகள் குறித்து அரச தகவல் திணைக்களம் அறிவிப்பு

கடல் மார்க்கமாக பறவைகள் மற்றும் ஊர்வன கடத்தல்.