வகைப்படுத்தப்படாத

நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா

(UTV|COLOMBO)-ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான உடன்படிக்கை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உடன்படிக்கைக்கு பிரித்தானிய அமைச்சரவையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 எனினும் சில அமைச்சர்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
அத்துடன் சபையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது குறித்தும் ஜனநாயக தொழிற்சங்கவாத கட்சி ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உடன்படிக்கை தொடர்பான அந்த நாட்டின் எதிர்கட்சியான தொழிற்கட்சி தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
ஆனால் இது நாட்டின் நலன்பொருட்டு உருவாக்கப்பட்டதாக தாம் கருதவில்லை என்று தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோபன் தெரிவித்துள்ளார்.

Related posts

England win Cricket World Cup

நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி

පාර්ලිමේන්තු විශේෂ කාරක සභාව අද රැස්වේ