உள்நாடுபிராந்தியம்

நுவரெலியா, பூண்டுலோயா வீதியில் மண்மேடு அகற்றும் பணி தொடர்கிறது

நுவரெலியா – பூண்டுலோயா பிரதான வீதியில் வாகன போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த வீதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து வீழந்தன.

அத்துடன் மரங்களும் முறிந்து வீழ்ந்தமையினால் அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது பொலிஸார், பொது மக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண்மேடு மற்றும் மரங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவுமானால் சீரமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.

-செ.திவாகரன்

Related posts

கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

editor

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பொருளாதார அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது – நாமல் எம்.பி

editor

பத்துளுஓயாவில் வீழ்ந்தது எரிபொருள் பவுஸர்