உள்நாடு

நுவரெலியாவில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவு

இன்று (22) பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் பதிவாகியுள்ளதுடன், அது 3.5 பாகை செல்சியஸாக காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் படி, அண்மைக்காலத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஏனைய பிரதேசங்களில் பதிவான வெப்பநிலை விபரம் வருமாறு:

பண்டாரவளை: 11.5 பாகை செல்சியஸ்

பதுளை: 15.1 பாகை செல்சியஸ்

கட்டுகஸ்தோட்டை: 15.9 பாகை செல்சியஸ்

இதேவேளை, அதிகபட்ச வெப்பநிலையாக முல்லைத்தீவில் 25.3 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது. அம்பாந்தோட்டையில் 22 பாகை செல்சியஸாகவும், கொழும்பில் 22.1 பாகை செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

Related posts

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு

editor

கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

கட்டாய தகனம் – இந்த மன்னிப்பு போதாது – பைஸர் முஸ்தபா