உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் லொறியொன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (20) விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி அதே திசையில் பயணித்த பஸ் ஒன்றை முந்தி செல்வதற்கு முயற்சித்தபோது நுவரெலியாவிலிருந்து ராகலை நோக்கி எதிர் திசையில் பயணித்த தனியார் பஸ்ஸூடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் தனியார் பஸ்ஸூம் லொறியும் பாரியளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றம்

editor

ஜனாதிபதி நிதியத்திற்கு IOC நிறுவனம் 100 மில்லியன் ரூபா நன்கொடை

editor

ரயில் என்ஜினில் தீ விபத்து