உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவிலிருந்து கண்டி சென்ற பஸ் விபத்தில் சிக்கியதில் 23 பேர் காயம்!

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று நேற்று (23) இரவு நுவரெலியா- கண்டி வீதியில் உள்ள டோப்பாஸ் பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் சாரதி உட்பட 54 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில், சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 3 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் காயமடைந்த நிலையில் நுவரெலியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பஸ்ஸில் பயணித்த குழுவினர் குருணாகலிலிருந்து பதுளைக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்தை எதிர்கொண்டனர்.

இவர்கள் குருணாகல், கிரிவவுல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஊழல், இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது ஜனாதிபதி அநுரவுக்கு கிடைத்த வெற்றி – பிமல்ரத்நாயக்க

editor

ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரக் குழவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்

editor

JustNow: லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு