ஹிங்குராக்கொடை நீதிமன்ற அறையில் விசாரணைக்காகக் காத்திருந்த ஒரு கைதி திடீரென சுகவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நேற்று (14) பொலன்னறுவை விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட ஒரு கைதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் 74 வயதான பொலன்னறுவை, கினிபெட்டி பாலத்துக்கு அருகில் வசிப்பவர்.
மின்னேரியா பொலிஸ் பிரிவில் புத்தர் சிலை திருட்டு வழக்கில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்ற போதிலும், யாரும் பிணை வழங்க முன்வராததால், அவர் பொலன்னறுவை விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிங்குராக்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
