உள்நாடு

நீண்ட காலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவி கைது

நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான ஆணின் வசம் 11 கிராம் மற்றும் 980 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பெண்ணின் வசம் 5,100 மில்லிகிராம் ஐஸ் (Ice) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளில், இவர்கள் இருவரும் நீண்ட காலமாக திவுலப்பிட்டிய, கட்டுவெல்லேகம, துனகஹ, அலுதேபொல, மரதகஹமுல்ல, நெல்லிகஹமுல்ல, நில்பனாகொட, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களுக்குப் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆண் இன்று (08) மினுவாங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவின் பேரில் விசாரிக்கப்படவுள்ளார். பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Related posts

உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் – ஜோசப் ஸ்டாலின்.

எமது அரசாங்கத்தினுள் எந்த தரத்தில் இருப்பவராயினும் தவறு செய்தால் நடவடிக்கை – ஜனாதிபதி அநுர

editor

புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம்