உள்நாடுபிராந்தியம்

நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கி உயிரிழந்த 5 வயது சிறுவன்

நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

நேற்று (08) மாலை இந்த விபத்து நடந்ததாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இந்த சிறுவன் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவுடன் நீச்சல் பயிற்யாளரின் உதவியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கியுள்ளான்.

இதன்போது, சிறுவன் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

மிரிஹான பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போரா மாநாடு:கொழும்பு- காலி வீதியில் வாகன நெரிசல்: மாற்று வழிகள்

கிளைபோசேட் தடையை நீக்க அரசு தயார்

இன்று நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் வேலைநிறுத்தம்

editor