வகைப்படுத்தப்படாத

நிவாரண நடவடிக்கைக்கு சதொச விற்பனை நிலையம்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மத்துகம பிரதேசத்தில் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவவேண்டுமென்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அகலவத்தையிலுள்ள பதுரெலிய பகுதிக்கு விஜயம் செய்தபோதே இந்த ஆலோசனைகளை வழங்கினார்.

குறித்த பிரதேசத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரதேசத்திலுள்ள சதொச நிறுவனங்கள் உதவவேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மத்துகமவில் உள்ள சதொச நிறுவனங்கள் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சருடன் பிரதிஅமைச்சர் பாலிததேவரப்பிரம்மவும் சென்றிருந்தார்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/rishath.jpg”]

Related posts

“Youth must act responsibly with their vote” – Dilum Amunugama

´ஜீடி´ கைது

கிண்ணியாவில் கஞ்சா கலந்த மதனமோதக லேகியத்துடன் ஒருவர் கைது