உள்நாடு

நிவர் சூறாவளியின் தாக்கம் குறைகிறது

(UTV | கொழும்பு) –  நிவர் சூறாவளியின் தாக்கம் இன்று முதல் குறைவடைக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சூறாவளியானது தமிழகம் கரையை ஊடறுத்து வடமேல் திசையில் நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வடமேல், மேல், சப்ரகமுவ, மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட இதுதான் கரணம்

முதல் நாளிலே 125 போக்குவரத்து வீதிமீறல்கள்!