உள்நாடு

‘நிலைமை சீராக இன்னும் இரண்டு வருடங்களுக்கு தாக்குப்பிடிக்க வேண்டும்’

(UTV | கொழும்பு) – இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை ஜனாதிபதி நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, விவசாயத்தை நவீனமயப்படுத்தி உற்பத்தி மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்க முடியும் என்றும் இதன்மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டும் துறையாக விவசாயத்தை மாற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

உலகின் உணவு நெருக்கடியை கருத்திற்கொண்டு, இலங்கை எதிர்நோக்கும் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு திட்டமிட்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இன்று நாட்டில் ஒரு பகுதியினர் உணவின்றி தவிக்கின்றனர். நடுத்தர மக்கள் வருமானத்தை இழந்துள்ளனர். அவர்கள் யாரிடமும் பிச்சை எடுக்க விரும்புவதில்லை. அடுத்த வருடமும் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். இன்று உலகம் முழுவதும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் போர் காரணமாக, இலங்கைக்கு தேவையான கோதுமை கிடைக்கவில்லை.

இது இலங்கை போன்ற சிறிய நாடுகளைப் பெரிதும் பாதிக்கிறது. இப்போது இந்தியா உணவு ஏற்றுமதியை நிறுத்திவிட்டது. சீனாவும் குறைத்துவிட்டது. இந்த நிலைமை இந்த டிசம்பரில் முடிவுக்கு வராது.

எனவே இந்த நிலை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கக்கூடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related posts

கல்வியியல் கல்லூரி – தகவல்களை வழங்குவதற்கான கால எல்லை நீடிப்பு

களனி பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு

விற்பனைக்காக வைத்திருந்த 4 வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது

editor