வகைப்படுத்தப்படாத

நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கம் – கல்வி அமைச்சு

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் தற்சமயம் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்குமாறு கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இரண்டாம் தவணை இன்று ஆரம்பமாகும் நிலையில் கல்வியமைச்சு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

தற்சமயம் நிலவும் அதிக வெப்பமான காலநிலையினால் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் மற்றும் இது பற்றி பெற்றோருக்கும் விளக்கமளிக்கப்படவுள்ளது.

நிலவும் வெப்பம் காரணமாக மாணவர்கள் கூடுதலாக நீர் அருந்துவதை ஊக்குவிப்பது அவசியமாகும். இதனால் பாடசாலை நீர்த்தாங்கிகளை சுத்தமாகப் பேணுவது அவசியமாகும்.

குடை, தொப்பி என்பனவற்றை பயன்படுத்துவது உகந்தது என்று கல்வியமைச்சு இதன்போது சுட்டிக்காட்டியிருக்கின்றது.

Related posts

Bangladesh rest Shakib for Sri Lanka ODIs

Showery condition expected to enhance from tomorrow

களனிவெளி தொடரூந்து பாதை இன்று முதல் மூடப்படும்