உலகம்

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவை 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியது

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று (30) அதிகாலை 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில், 19 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளதுடன், அந்நாட்டில் 1 மீட்டர் வரை அலைகள் உயரக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் ஹவாய் தீவுகள் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

ஏற்றுமதி செய்யும் பணிகளை இந்தியா தற்காலிகமாக இடை நிறுத்தியது

ஈரான் – ஈராக் – அமெரிக்க போன்ற நாடுகளுக்கிடையில் பதற்ற நிலை [VIDEO]

AstraZeneca தடுப்பூசி தொடர்பில் WHO அறிவிப்பு