உள்நாடு

நிறைவேறியது, 2023 ஆம் ஆண்டிற்க்கான வரவு செலவுத்திட்டம்

(UTV | கொழும்பு) –     அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்க்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதனையடுத்து வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமானது. இன்று 7ஆவது நாளாகவும் விவாதம் இடம்பெற்றதோடு, இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கான இரண்டாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 121 வாக்குகள் ஆதரவாகவும் 84 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.

இதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வரை வரவு செலவுத் திட்ட குழு வாய்ப்பு விவாதம் நடைபெறவுள்ளதுடன் குறித்த விவாதத்தின் முடிவில் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது குற்றச்சாட்டு – டலஸ் ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்

editor

இலஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டு

editor

இலங்கை கிரிக்கெட் அணியில் மூவருக்கு கொரோனா