உள்நாடு

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 6 முச்சக்கரவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது

கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 6 முச்சக்கரவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று வெள்ளிக்கிழமை (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 49 குடும்பங்கள்!

சில மருந்துகளின் விலை தொடர்பில் அரசு கவனம்

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட பாதுகாப்பு!