உள்நாடுபிராந்தியம்

நிறுத்தப்பட்டிருந்த சிறிய லொறியுடன் பாரிய வாகனம் மோதி விபத்து

மாவனல்லை, கனேதென்ன பகுதியி ல் ப்ரைம் மூவர் பார ஊர்தி ஒன்று வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரக லொறிய ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (09) முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், லொறி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த காணிக்குள் வீசப்பட்டு கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்து ஏற்படும் போது லொறியில் அதன் சாரதி மற்றும் உதவியாளர் இருக்கவில்லை என்பதால் அவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவனல்லை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மினுவங்கொடை கொவிட் கொத்தணி : 186 பேர் பூரண குணம்

மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் இல்லை

கரையோர ரயில் நேர அட்டவணையில் மாற்றம்