உலகம்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –   நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும், அவர் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அந்நாட்டு அரசாங்க  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஜெசிந்தா தனது கூட்டாளியான கிளார்க் கேஃபோர்டுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் அடுத்த திங்கட்கிழமை ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் உரையாற்ற உள்ளார், அப்போது அவருக்குப் பதிலாக துணைப் பிரதமர் கிராண்ட் ராபர்ட்சன் நியமிக்கப்படுவார்.

வியாழன் அன்று நியுசிலாந்தின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் அவர் கலந்து கொள்ள முடியாது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து – 27 பேர் பலி – 14 பேர் மாயம்

editor

உலக சுகாதார நிறுவனத்தினால் அவசர நிலை