வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து தாக்குதல்-துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 50 கொலைக் குற்றச்சாட்டுகள்…

(UTV|NEW ZEALAND) கடந்த மார்ச் 15ம் திகதி நியூசிலாந்தில் க்றிஸ்சேர்ச் பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது 50 கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இருப்பதாக நியூசிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் நியூசிலாந்து பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;

“..நியூசிலாந்தின் க்றிஸ்சேர்ச்சிலுள்ள 02 பள்ளிகளில் தாக்குதல் நடத்திய குற்றவாளி, 50 கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவுள்ளதோடு, 36 பேரை கொலை செய்ய முயன்றுள்ளதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.

இந்நிலையில் வழக்கில் அவருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது..” எனத் தெரிவித்துள்ளனர்.

எனினும் குற்றவாளி பயன்படுத்திய தானியங்கி துப்பாக்கி மற்றும் ரைபிள் ரக துப்பாக்கிகளை பாரதூரமான துப்பாக்கிகளுக்கான விதிகளின் கீழ் கொண்டு வந்து தடை செய்வதாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

எஸ்.எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை

Person shot while trying to enter school dies

நேபாள ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்