வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து தாக்குததாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்..!தாயிடமிருந்து வேண்டுகோள்…

(UTV|NEW ZEALAND) நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பிரதான 02 பள்ளிகளில் கடந்த வெள்ளிக்கிழமை(15) தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில், 50 பேர் பலியாகி நேற்றுடன் (22) ஒரு வாரம் நிறைவு பெறுகிறது.

அதனை நினைவு கூறும் விதமாக நேற்றைய தொழுகையில் அநேகமான மக்கள் இன மத பேதமின்றி வருகை தந்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

Image result for new zealand ATTACK

இந்நிலையில் குறித்த சந்தேக நபரின் தாயார் அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், ஊடகவியலாளர் குறித்த தாக்குதலில் நேரலையினை காண்பிக்க.. “என்னால் தொடர்ந்தும் அதனை பார்வையிட முடியாது அதனை நிறுத்துமாறு கோருகிறார். பின்னர் தன்னை கட்டுப்படுத்த முடியாதவாறு கண்ணீர்விட்ட குறித்த தாய் எனது மகனுக்கு தகுந்த தண்டனை மரண தண்டனையே என தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

அந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

விமலின் உண்ணாவிரதம் தொடர்கிறது

Malinga seals Sri Lanka win in his Final ODI