உள்நாடுபிராந்தியம்

நிந்தவூர் தொழில் பயிற்சி நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்

அம்பாறை மாவட்டம் தொழில் பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரியும் தமிழ் மொழி மூலம் போதனா ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் நிந்தவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்ட ஒன்றினைந்த சுதந்திர தொழில்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் தொழில் பயிற்சி நிலையத்தின் முன்பாக நேற்று (17) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் தொழில் பயிற்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் டி. வினோதராஜாவை இடமாற்றம் கூறி அம்பாறை மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரியும் போதனா ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அம்பாறை மாவட்டம் பிரதிப் பணிப்பாளர் தம்மீது அடக்குமுறை வைப்பதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தினர்.

இது தொடர்பாக நாம் அம்பாறை மாவட்டத்தின் தொழில் பயிற்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் டி. வினோதராஜாவை தொடர்பு கொண்டு வினவியபோது ” கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாத சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டதால் அத்தகைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக” அவர் சுட்டிக்காட்டினார்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

நாட்டில் மத, கலாசார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு வாய்ப்பு – ஜனாதிபதி அநுர

editor

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்படும்

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு