உலகம்

நிச்சயமாக ஈரானை மீண்டும் தாக்குவேன் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் கணிசமான அளவில் யுரேனியத்தை செறிவூட்ட முடியும் என்று உளவுத்துறை நிறுவனங்கள் முடிவு செய்தால், நிச்சயமாக ஈரானை மீண்டும் தாக்குவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்று அவர் அறிவித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இதேவேளை ஈரானுக்கான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் கைவிட்டதாக ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முத்தத்தால் சர்ச்சை : கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் தாயார், உண்ணாவிரதத்தில்

பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி

சீன தூதரகங்களை மூட உத்தரவு – அமெரிக்கா